எனக்கு முன்னால்
எனக்கு முன்னால் உங்கள் முன்னால் உள்ள ஐந்து இடங்கள் வரை அறிவிக்கிறது. ஒவ்வொன்றையும் அதன் சொந்தத் திசையிலிருந்து, அதன் தொலைவுடன் கேட்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாத தெருவில், முன்னால் என்ன இருக்கிறது என்பதை அறிய இதைப் பயன்படுத்தவும்.
நீங்கள் ஓரிடத்தில் நின்றிருந்தால், முதலில் தொலைபேசியின் மேல் முனையை நீங்கள் நோக்கியிருக்கும் திசையில் காட்டவும். தொலைபேசி பூட்டப்பட்டிருந்தால், அல்லது Soundscape திரையில் இல்லாவிட்டால், தொலைபேசியைத் தட்டையாகவும் பிடிக்கவும்.