குறிப்புகள்
அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களைக் கண்டறிய, அருகிலுள்ள இடங்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து பொது போக்குவரத்து என்பதைத் தேர்வுசெய்யவும்.
நீங்கள் அடிக்கடி ஒரே பேருந்தில் பயணித்தால், உங்கள் நிறுத்தங்களைக் குறிப்பான்களாகச் சேமிக்கவும். நீங்கள் இறங்கும் நிறுத்தத்தில் ஒரு பீக்கனை அமைக்கவும்; பயணத்தின்போது அது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை Soundscape சொல்லும்.
பீக்கனை முடக்கிய பிறகும் இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கேட்கலாம். நீங்கள் நகரும்போது Soundscape அவ்வப்போது தொலைவைச் சொல்லும்.
செல்வதற்கு முன் ஓர் இடத்தை ஆராய, அதன் இருப்பிட விவரங்கள் என்பதைத் திறந்து இருப்பிடத்தை உருவகப்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அப்போது நீங்கள் அங்கேயே இருப்பது போல Soundscape செயல்படும்.
திருப்பம் திருப்பமான வழிகாட்டுதலுக்கு, ஓர் இடத்தின் இருப்பிட விவரங்கள் என்பதைத் திறந்து வரைபடச் செயலியில் திற என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மற்ற செயலி வழிகாட்டும்போதும் Soundscape தொடர்ந்து இயங்கும்.